தமிழ்நாடு

'படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா'- நடிகர் ரஜினிக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து

DIN

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படவுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சனிக்கிழமை அறிவித்துள்ளார். 

இதையடுத்து, கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் தன்னைக் கெளரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,

அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்த நடிகர் ரஜினிக்கு வாழ்த்து, படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என்று வாழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT