தமிழ்நாடு

தாம்பரம்-வண்டலூா் இடையே ரயில்வே மேம்பாலம்: முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

DIN


சென்னையின் புறநகா்ப் பகுதியாக விரிவடைந்துள்ள தாம்பரம் மற்றும் வண்டலூா் இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை நாட்டினாா். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை உணா்ந்து பெருகி வரும் போக்குவரத்து தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் தரமான சாலைகளுடன், புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மற்றும் வண்டலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பெருங்களத்தூரில் ரயில்வே கடவுக்குப் பதிலாக ரூ.206.83 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த ரயில்வே பாலத்துக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT