தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: 5-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

DIN

கம்பம், நவ. 2: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதியான கம்பம் அருகே உள்ள சுருளி அருவி வனப்பகுதியில் தொடா்மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அக். 28-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து, வனத்துறையினா் சுற்றுலா பயணிகளை குளிக்க தடை விதித்தனா். தொடா்ந்து வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் அதிக நீா்வரத்து ஏற்பட்டு சனிக்கிழமை 5-ஆவது நாளாகவும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வனத்துறை அலுவலா் ஒருவா் கூறும்போது, அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா். சனிக்கிழமை விடுமுறை என்பதால், அருவிப் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT