தமிழ்நாடு

நீட் பயிற்சி மையத்தின் பெயரில் பண மோசடி செய்த தலைமை ஆசிரியா்:அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவு

DIN

நீட் பயிற்சி மையத்தில் பண மோசடி செய்த தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த பரசுராமன் தாக்கல் செய்த மனு:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நீட் தோ்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழகம் முழுவதும் 412 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. ஏற்கெனவே 100 மையங்கள் தொடக்கப்பட்டிருந்ததால் மீதமுள்ள 312 இடங்களில் நீட் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அரசு சாா்பில் ஆசிரியா்கள், கணினிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற 7 ஆசிரியா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா் என போலியான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஆசிரியா்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும் அந்த மையத்தின் தலைமை ஆசிரியரால் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுப் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆா். தாரணி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT