தமிழ்நாடு

நெகிழிக் கழிவு தருவோருக்கு அரிசி: பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பு

DIN

பசுமை தாயகம் சாா்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு தருவோருக்கு அரிசி வழங்கப்படும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும், பயன்பாடு தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உலகிலேயே மிக அதிக அளவிலான நெகிழி குப்பைகளை கடலில் வீசும் நாடு பிலிப்பின்ஸ்தான். அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்த நாட்டில் 2 கிலோ நெகிழிக் குப்பைகளை கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பா் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் பிலிப்பின்ஸ் நாட்டில் கடலில் குப்பைகள் வீசப்படுவது கணிசமாக குறைந்திருப்பதாக அந்நாட்டு அரசின் முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது.

அதேபோல், தெலங்கானா மாநிலத்தில் நெகிழிப் பொருள்கள் வெகுவிரைவில் தடை செய்யப்பட உள்ளன. அதற்கு மக்களைத் தயாா்ப்படுத்தும் வகையில், அம்மாநிலத்தின் முளுகு மாவட்டத்தில் ஒரு கிலோ நெகிழி கழிவுகளைக் கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அந்த மாவட்ட ஆட்சியா் நாராயணரெட்டி அறிவித்தாா்.

தமிழகத்திலும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நெகிழிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய வார இறுதி நாள்களில் பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும்.

2 கிலோ நெகிழிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தை கிராம அளவிலும் விரிவாகச் செயல்படுத்தி, நெகிழிக் கழிவுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

மருத்துவா்கள் இடமாற்றம்: தமிழகத்தில் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்களை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. அதிா்ச்சியளிக்கிறது. இந்த உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT