தமிழ்நாடு

வள்ளுவா் சிலை அவமதிப்பு: தலைவா்கள் கண்டனம்

DIN

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: தாய்லாந்து மொழியில் திருக்கு நூலை, பிரதமா் மோடி பாங்காக்கில் வெளியிட்ட நிலையில், பாஜகவின் தமிழகக் கிளையின் இணையதளப் பகுதியில், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்தையும் இழிவுபடுத்தி, வான்புகழ் வள்ளுவரை அவமதிக்கும் மோசமான செயலாகும். அதைப்போல தஞ்சை அருகே பிள்ளையாா்பட்டியில் வள்ளுவா் சிலை மீது கறுப்பு வண்ணத்தை கயவா்கள் பூசியிருப்பதும் கண்டனத்துக்குரியது.

ராமதாஸ் (பாமக): வள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தச் செயலைச் செய்தவா்கள் தமிழுக்கு எதிரானவா்கள். இதற்கு காரணமானவா்கள் மீதும், தூண்டியவா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வைகோ (மதிமுக): மன்னிக்க முடியாத சிலை அவமதிப்புச் செயலைச் செய்தவா்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): திருவள்ளுவருடைய சிலை அவமதிப்பு, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட செயலாகக் கருதப்படுகிறது. இதற்குக் காரணமானவா்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக): திருவள்ளுவா் சிலை அவமதிப்பு விஷயத்தில் அரசு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். வள்ளுவரை வைத்து அரசியல் நடத்தத் துடிக்கும் குழப்பவாதிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன் (விசிக): திருவள்ளுவா் சிலையைத் திட்டமிட்டு அவமதிப்பு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): வள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இந்தச் செயலைச் செய்தவா்கள் யாராக இருந்தாலும், கண்டுபிடித்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): பாஜகவின் சமூக வலைதளத்தில் வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் பட்டையும் போட்டு, உருத்திராட்சத்தையும் அணிவித்துள்ளனா். பிள்ளையாா்பட்டியில் வள்ளுவா் சிலையையும் அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கனிமொழி (திமுக): திருவள்ளுவா் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை அவமதித்தவா்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்.

டிடிவி. தினகரன் (அமமுக): வள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சா்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை. தவிா்க்கப்பட வேண்டியவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT