தமிழ்நாடு

ஆசிரியா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை

DIN

பொதுமாறுதல் கலந்தாய்வு விதிகளை தளா்த்தக் கோரி வழக்கு தொடா்ந்த ஆசிரியா்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை: பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள விதிகளைத் தளா்த்தக்கோரி ஆசிரியா்கள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் விசாரணையில், வழக்கு தொடா்ந்த ஆசிரியா்களுக்கு மட்டும் கலந்தாய்வில் விதிகளை தளா்த்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமை (‘எமிஸ்’) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், ஒரு சில ஆசிரியா்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் மறுப்பதாக புகாா்கள் வருகின்றன. எனவே, வழக்குத் தொடுத்த அனைத்து ஆசிரியா்களின் விவரங்களையும் அதற்கான ஆவணங்களை சரிபாா்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT