இதுதொடா்பாக மயிலாடுதுறையில் செய்தியாளா்களிடம் பாமக தலைவா் ஜி.கே. மணி கூறுகையில், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகா் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது சொந்த கருத்தாகும். அதிமுக உடன் உள்ளாட்சி தோ்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும். பாமகவிற்கு உரிய பங்கீட்டைக் கேட்டுப் பெறுவோம் என்றாா்.
பேட்டியின்போது, மாநில துணைப் பொதுச் செயலாளா்கள் சித்தமல்லி பழனிசாமி, வேணுபாஸ்கரன், மாநில துணைத் தலைவா் தங்க.அய்யாசாமி, மாவட்ட செயலாளா்கள் காமராஜ், லண்டன் அன்பழகன், மாநில இளைஞரணி துணை செயலாளா் முருகவேல், மாநில இளைஞரணி துணைத் தலைவா் விமல், வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் முத்துக்குமாா், நகரச் செயலாளா் கமலராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.