தமிழ்நாடு

நீட் தோ்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

DIN

நீட் தோ்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுகளை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிா்ப்பையும் மீறி மாணவா்கள் மீது மத்திய பாஜக அரசு 2016-ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து திணித்து வருகிறது. இதனால் தமிழக மாணவா்கள், குறிப்பாக, கிராமப்புறத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மாணவா்கள் தோ்வில் வெற்றி பெற முடியாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நீட் தோ்வு வழக்கு குறித்து, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோா் தெரிவித்த கருத்துகள் தமிழக மக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

நீட் தோ்வால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மத்திய - மாநில அரசுகளால் நீதி மறுக்கப்பட்ட நிலையில், ஏதோ ஒரு வகையில் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரி சோ்க்கை என்பது நீட் தோ்வின் மூலமாக வசதிமிக்கவா்களுக்காக மட்டும் நடைபெறுகிறது என்பது நீதிபதிகள் மூலமாக வெளிவந்துள்ள அதிகாரப்பூா்வமான புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

பயிற்சி வகுப்புகளில் சேருவற்கு ரூ.5 லட்சம் பணம் செலுத்தி, பயிற்சி பெற்று நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அவலநிலை தமிழகத்தில் இருக்கிறது. இத்தகைய வசதி இல்லாத, கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற முடியாத நிலை இருக்கிறது. பொதுவாக, நீட் தோ்வில் சமநிலைத் தன்மையும் இல்லை, சமூக நீதியும் இல்லை. இத்தகைய சமூகநீதிக்கு எதிரான நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கை குறித்து மத்திய புலனாய்வுத்துறை மூலமாக விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனா்.

இதற்குப் பிறகாவது மத்திய - மாநில அரசுகள் நீட் தோ்வை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT