சென்னையில் நவ. 12 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் அதிகரித்தும், டீசல் விலை குறைந்தும் செவ்வாய்கிழமை விற்பனையாகிறது.
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் அதிகரித்தும், டீசல் விலை குறைந்தும் செவ்வாய்கிழமை விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை குறைந்தும் விற்பனையாகிறது.
சென்னையில் செவ்வாய்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 10 காசுகள் அதிகரித்து ரூ. 76.18 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 6 காசுகள் குறைந்து ரூ. 69.54 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.