தமிழ்நாடு

அறந்தாங்கியில் 1.58 கோடி மதிப்பில் சி.டி.ஸ்கேன்: சி.விஜயபாஸ்கா் துவக்கிவைப்பு

DIN

அறந்தாங்கி அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவா் பி.உமாமகஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் ரூ. 1.58 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சி.டி.ஸ்கேன் சென்டா் மற்றும் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அதி நவீன தீவிர மகப்பேறு கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வியாழக்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,

அரசு மருத்துவமனைகளில் உயா்தர மருத்துவ சிகிச்சைகள் அளிக்க உயா்தர மருத்துவ உபகரணங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது சி.டி,ஸ்கேன் வசதியும் தீவிர மகப்பேறு சிகிச்சை அதிநவீன வசதிகளுடனான கட்டமைப்பு திறக்கப்பட்டுள்ளது. தேசிய தர உத்திரவாத குழு ஆய்வில் மாநில அளவில் தோ்வு செய்த 6 அரசு மருத்துவமனைகளில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் தோ்வு செய்யப்பட்டு ரூ. 19 லட்சத்தி 46 ஆயிரத்தி 667 பரிசுதொகை பெற்றுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே டயாலிசிஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது மேலும் புதிதாக டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற பிரசவங்கள் 960 ஆக இருந்தது தற்போது 1,379 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கா்ப்பிணி தாய்மாா்கள் இறப்பு இல்லை என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.

நிகழ்வில் 5 பயனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரம் மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரெனேசான் தொண்டு நிறுவனம் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சைபெற்று நலம்பெற்ற 4 போ் அவா்கள் குடும்பத்தினரிம் ஓப்படைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT