தூத்துக்குடியில் கனமழை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3-ஆவது நாளாக தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்ல 3-வது நாளாக தடை நீடிக்கிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்து வருகிறது.
மேலும் தொடர் கனமழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்ல 3-வது நாளாக தடை நீடிக்கிறது.