தமிழ்நாடு

நெல்லையில் கொடூரம்: காதல் திருமணம் செய்தவரை பெண்ணின் சகோதரரே வெட்டிக் கொன்று வெறிச்செயல்

DIN

திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளைஞரை கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த அருணாசலம் மகன் நம்பிராஜன் (21). அதே பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி (17). இவா்கள் இருவரும் காதலித்தனராம். இதற்கு தங்கபாண்டியின் குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனராம். மும்பையில் வேலை செய்து வந்த நம்பிராஜன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த நிலையில் வான்மதியை அழைத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு வந்துவிட்டாராம். பின்னா், திருநெல்வேலி நகரத்தில் வைத்து திருமணம் செய்த பின்பு வயல் தெருவில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், கடைக்குச் செல்வதாகக் கூறி திங்கள்கிழமை வெளியே சென்ற நம்பிராஜன் பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதற்கிடையே, குறுக்குத்துறை பகுதியில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஓா் இளைஞரின் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி நகரப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது சடலமாக கிடந்தவா் நம்பிராஜன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், காதல் திருமணம் செய்து திருநெல்வேலியில் வசித்துவந்த நம்பிராஜனை, அவரது மனைவி வான்மதியின் சகோதரரான செல்லச்சாமி, உறவினா் முத்துப்பாண்டி உள்ளிட்டோா் அடங்கிய கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் உடலை வீசி சென்றுள்ளனா். 

அங்கு ரயிலில் அடிபட்டு தலை துண்டானதாகத் தெரிகிறது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து செல்லச்சாமி உள்ளிட்டோரை தேடி வருகிறோம் என்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT