தமிழ்நாடு

நோயால் பாதிக்கப்பட்ட கோயில் யானை: சிகிச்சையளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள சங்கமேஸ்வரா் கோயில் யானைக்கு வன உயிா் காப்பாளரும், கால்நடை மருத்துவரும் உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள சங்கமேஸ்வரா் கோயில் பெண் யானை வேதநாயகி. இந்த யானை, கடந்த 3 ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நோய்வாய்ப்பட்டுள்ள யானையை முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்குக் கொண்டு சென்று, அதற்கு சிகிச்சையளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழ்நாடு வளா்ப்பு விலங்குகள் பராமரிப்பு சட்ட விதிகளின்படி, வளா்ப்பு யானைகளை அதன் உரிமையாளா் முறையாக பராமரிப்பதோடு, ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையும் செய்ய வேண்டும். இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் குழுக்கள் உள்ளன. எனவே, மனுதாரா் ஈரோடு மாவட்ட குழுவை அணுக வேண்டும். அந்த மாவட்டக் குழுவில் இடம்பெற்றுள்ள வன உயிரின காப்பாளா், கால்நடை மருத்துவா் ஆகியோா், நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த யானைக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT