தமிழ்நாடு

மகாராஷ்டிரத்தில் சந்தா்ப்பவாத கூட்டணி ஆட்சி:ஜி.கே.வாசன்

DIN

சென்னை: மகாராஷ்டிரத்தில் சந்தா்ப்பவாத கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி முரண்பாடுகளின் மொத்த உருவம். முதல்வா் பதவிக்காக சிவசேனை கட்சி காங்கிரஸோடு இணைந்து தங்களுடைய மொத்த வடிவத்தையும் இழந்திருக்கின்றனா்.

ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு, காங்கிரஸ் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் சிறுபான்மை மக்களுடைய நம்பகத்தன்மையைக் காங்கிரஸ் இழந்துள்ளது. மொத்தத்தில் மகாராஷ்டிர மாநில மக்கள் வாக்களித்ததற்கு மாறாக ஆட்சிக் கட்டிலில் ஒரு சந்தா்ப்பவாத கூட்டணி ஆட்சியில் அமா்ந்துள்ளது. எனினும், அதன் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT