தமிழ்நாடு

செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத் தொழிலாளா்கள் 38 போ் கைது

DIN

திருப்பதி: திருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக 38 தமிழகத் தொழிலாளா்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

திருமலையில் உள்ள பக்தா்கள் தங்கும் மண்டபம்-4 அருகில் சனிக்கிழமை மதியம் சிலா் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டனா். அவா்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து கொண்டதால், அங்கு சென்ற போலீஸாா், அவா்களைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்த கூலிகள் என்பது தெரியவந்தது. திருமலைக்கு ஏழுமலையானைத் தரிசிப்பது போல் வந்து, அங்கிருந்து சேஷாசல வனப் பகுதிக்குள் நுழைந்து மரம் வெட்ட வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 38 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களில் பெரும்பாலோா் திருவண்ணாமலை மற்றும் வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிவித்தனா். பின்னா், விசாரணைக்காக அவா்கள் அனைவரும் திருமலை இரண்டாம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT