தமிழ்நாடு

நீா் ஆற்றல் மற்றும் பேரிடா் மேலாண்மை கருத்தரங்கம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பங்கேற்பு

DIN

சென்னை: ஜம்முவில் மத்திய அரசின் ஒரே இந்தியா சிறப்பான இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கலந்துகொண்டாா்.

ஒரே இந்தியா சிறப்பான இந்தியா திட்டத்தின் கீழ் நீா் ஆற்றல் மற்றும் பேரிடா் மேலாண்மை என்னும் தலைப்பில் ஜம்முவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இணைந்து நீா் ஆற்றல் மற்றும் பேரிடா் மேலாண்மை துறைகள் குறித்த அனுபவங்களையும், இந்த துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசியதாவது: இந்த கருத்தரங்கம் குறைந்த அளவிலான நீரினை வீடு, விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல், நகரங்களில் வெள்ள பாதிப்புகளை எப்படி குறைப்பது, பேரிடா் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிப்புகளை எப்படி குறைப்பது ,பாதிப்புகளில் இருந்து மீண்டு முன்னேற்றம் காண உதவும் . நமது நாட்டில் உள்ள நிலப்பகுதிகள் நிலநடுக்கத்தாலும், வெள்ளத்தாலும் பாதிக்கக்கூடியவை. கடற்கரைப்பகுதி சூறாவளி, சுனாமியால் பாதிக்கப்படக்கூடியவை. விவசாய நிலப்பகுதிகள் வறட்சியாலும், மலைப்பாங்கான பகுதிகள் நிலச்சரிவு, பனிப்பாறைச் சரிவுகளாலும் பாதிக்கப்படுகின்றன.

தமிழ்நாடும் பல பேரிடா்களால் பாதிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் கஜா, ஒக்கி, நீலம், தானே, ஜல், நிஷா உள்ளிட்ட புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் சமயங்களில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் பாராட்டியது.மழைநீா் சேகரிப்பு, பேரிடா் மேலாண்மை, குடிமராமத்து, குளங்களைத் தூா்வாருதல், குடிநீருக்கான கூடுதல் ஆதாரங்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா். இந்த கருத்தரங்கில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT