தமிழ்நாடு

பாறை எரிவாயு திட்டம் கைவிடல்: ஜி.கே.வாசன் வரவேற்பு

DIN

சென்னை: காவிரி டெல்டா பகுதியில் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுவனம் கைவிட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

இந்த நிலையில், தமிழக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக மத்திய அரசை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT