தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேவை: தமிழகத்துக்கு தேசிய விருது: தில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கினார்

DIN


மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததற்காக தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து, தமிழக அமைச்சர் வி.சரோஜா பெற்றுக் கொண்டார்.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளித்த மாநிலங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சரோஜா கூறியதாவது:
முதியோர் நலனுக்காக 2007-இல் இயற்றப்பட்ட சட்ட ஷரத்துகளை முதியோர், பெற்றோர் நலன் காக்கும் வகையில் நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தேசிய விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா முதியோர் நலன் காக்கும் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆரம்பத்தில் 20 முதியோர் இல்லங்கள் தொடங்கப்பட்டது. தற்போது 48 ஒருங்கிணைந்த வளாகங்கள் மூலம் முதியோர், குழந்தைகள் பயன்பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதியோருக்கான உணவூட்டும் மானியம் ரூ.653-இல் இருந்து ரூ.1,200ஆகவும், அவர்களுடன் வசிக்கும் குழந்தைளுக்கான மானியம் ரூ.750-இல் இருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர் தொற்று நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக 4,700 பயனாளிகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாகங்களின் மேம்பாட்டுக்காக நிகழாண்டு ரூ.7.65 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் 2007 மற்றும் விதி 2009-இன் படி கோட்டாட்சியர்கள் தலைமையின் கீழ் 81 தீர்ப்பாயங்கள், ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பெறப்பட்ட 2,400 விண்ணப்பங்களில் 2,200 விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT