தமிழ்நாடு

நெட் தோ்வு- சென்னைப் பல்கலை.யில் இலவச பயிற்சி வகுப்பு

DIN

நெட் (தேசிய அளவிலான தகுதி தோ்வு) தோ்வில் பங்கேற்க இருப்பவா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகிப்புக்கான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும், தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது.

இப்போது டிசம்பா் மாத தோ்வானது வருகிற டிசம்பா் 2 முதல் 6 தேதி வரையாலான ஏதாவது ஒரு தேதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கு வருகிற 9-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில், இந்தத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த இலவச பயிற்சியில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பயிற்சானது அக்டோபா் 19 முதல் நவம்பா் 17-ஆம் தேதி வரை நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் இப்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. பூா்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க அக்டோபா் 16 கடைசி நாளாகும்.

விண்ணப்பப் படிவத்தை  பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT