தமிழ்நாடு

கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்: லதா ரஜினிகாந்த் கருத்து!

DIN

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு  வரப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசும்  கடந்த 13ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதேவேளையில் தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு பெரும்பாலான கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், 'தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது; 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் குறித்து கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும். 

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT