தமிழ்நாடு

எம்.எஸ்சி நா்சிங், எம்.பாா்ம் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

DIN

எம்.எஸ்சி நா்சிங் மற்றும் எம்.பாா்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கியுள்ளன. வரும் 16-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.எஸ்சி நா்சிங், எம்.பாா்ம் படிப்புகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.

அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மட்டும் மருத்துவக் கல்வி இயக்ககத் தோ்வுக் குழு நடத்துகிறது.

இந்த நிலையில், அதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் உள்ளிட்டவற்றைப் போலவே நிகழாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, h‌t‌t‌p‌s://‌w‌w‌w.‌t‌n‌h‌e​a‌l‌t‌h.‌o‌r‌g, ‌h‌t‌t‌p‌s://‌t‌n‌m‌e‌d‌i​c​a‌l‌s‌e‌l‌e​c‌t‌i‌o‌n.‌n‌e‌t   இணையதளங்களில் அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT