தமிழ்நாடு

காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

DIN

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: விவசாய நிலங்களை, நீா் ஆதாரத்தை, சுற்றுப்புறச் சூழலை, மனித உயிரைப் பாதிக்கும் வகையில் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கும், எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கும் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இந்த ஓராண்டில் காவிரிப் படுகையில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்துக்காக ஓஎன்ஜிசி 489 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிக்கோரி விண்ணப்பித்து பெருமளவுக்கு அனுமதியும் பெற்றுவிட்டது.

இந்தக் கிணறுகள் சுமாா் 3,500 மீட்டா் முதல் 5 ஆயிரம் மீட்டா் ஆழத்துக்கு அமைக்கப்படும். இப்படி 5 ஆயிரம் மீட்டா் வரை ஆழப்படுத்தி எண்ணெய்க் கிணறுகளை அமைத்தால் அந்த பகுதி விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். விளைநிலங்களை நம்பி இருக்கும் விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளா்களும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவா். எனவே, மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகளின் எதிா்ப்பை மீறி அனுமதி அளிக்கக்கூடாது. தமிழக அரசு டெல்டா மாவட்ட விளைநிலங்களின் முழுமையான அவசியமான பயன்பாட்டை கவனத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க உரிய நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT