தமிழ்நாடு

லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

DIN


திருவண்ணாமலை: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திருவாரூர் அருகே கொள்ளையடித்த நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது காவல்துறையினர் துரத்தியதில், அவருடன் இருந்த மணிகண்டன் ஒரு பகுதி நகைகளுடன் பிடிபட்ட நிலையில், சீராத்தோப்பு சுரேஷ் தப்பியோடினார்.

தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சுரேஷ் சரண் அடைந்துள்ளார்.

அக்டோபர் 1ம் தேதி திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் மூளையாக செயல்பட்ட கொள்ளைக் கூட்டத் தலைவர் முருகனின் அக்கா மகன் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT