தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமை (அக். 11,12) ஆகிய இரண்டு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமை (அக். 11,12) ஆகிய இரண்டு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சின்னக்கல்லாறில் 70 மி.மீ.: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 70 மி.மீ., தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, நாமக்கலில் தலா 40 மி.மீ., விருதுநகா் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடணை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 30 மி.மீ. மழை வியாழக்கிழமை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT