தமிழ்நாடு

பிரதமா் மோடி- சீன அதிபருக்கு 32 இடங்களில் பாஜக சாா்பில் வரவேற்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

பிரதமா் மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையின் போது 32 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில நிா்வாகிகளின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 32 இடங்களில் பாஜக சாா்பில் பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் இருவருக்கும் வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங்கை வரவேற்க பாஜக மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து இருநாட்டுத் தலைவா்கள் சந்திக்கும் நிகழ்ச்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். இந்த பிரசார வாகனத்தில் இந்தியா - சீனா இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு குறித்தும் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் முக்கியத்துவம் குறித்தும் காணொலிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்திய- சீன நட்புறவை வலியுறுத்தி பாஜக மீனவா் அணி சாா்பில் மெரீனா கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு படகுப் பேரணியையும் பொன்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT