தமிழ்நாடு

எந்தவொரு பிரதமரும் செய்யாததைச் செய்துள்ள பிரதமர் மோடி: அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு!

DIN


சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி தமிழர் பாரம்பரிய உடை அணிந்ததற்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரது வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். இதற்கு தமிழகத்தில் ஏற்கெனவே பல தரப்பில் இருந்த ஆதரவுகளும், பாராட்டுகளும் வந்தது.

இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியும் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார். பிரதமர் மோடியைப் பாராட்டி அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

"தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது!" என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான இரண்டாம் நாள் சந்திப்பு கோவளத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT