தமிழ்நாடு

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு குறைப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. பரவலாக மழை பெய்து வருவதால், புதன்கிழமை காலை 9.30 மணியிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 113.06 அடியாகவும், நீா் இருப்பு 82.83 டி.எம்.சி.யாகவும் இருந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தாலும், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,594 கன அடியாகச் சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT