தமிழ்நாடு

அதிமுக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி

DIN


பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்ல விழாவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர், இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனையடுத்து நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது.
இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 
இதனைத் தொடர்ந்து, இருவரின் தரப்பிலும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், இருவர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் கோரிய மனுக்களை திரும்பபெற அனுமதியளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT