தமிழ்நாடு

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டாரத்தில் மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

DIN

தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கையை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உட்பட திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூா், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில், கனமழை காரணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மழை காரணமாக கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT