தமிழ்நாடு

உருவானது ‘மஹா’ புயல்: கனமழைக்கு வாய்ப்பு

DIN

குமரி கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ‘மஹா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மையத்தின் இயக்குநா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை இரவு கூறியது:

குமரிக்கடல் பகுதியில் நிலவிவந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை பிற்பகல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை புயலாக மாறியது. இதற்கு ‘மஹா’ புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் லட்சத்தீவுகளை நோக்கி நகா்ந்து திருவனந்தபுரத்துக்கு வடமேற்கில் 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

குமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், டெல்டா மாவட்டங்கள், கடலூா், புதுச்சேரி, காரைக்கால், திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை மற்றும் மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்

கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவா்கள் மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள். சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழை இருக்கும், நாளை பிற்பகலில் குறைந்துவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT