தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் பதவி: தமிழிசை சவுந்திரராஜன் ராஜிநாமா 

தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ஞாயிறு மதியம் ராஜிநாமா செய்தார் .

DIN

சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ஞாயிறு மதியம் ராஜிநாமா செய்தார் .

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று நியமிக்கப்பட்டார். தெலங்கானா மற்றும் ஆந்திராவின்  ஒருங்கிணைந்த ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வந்த நிலையில், தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பு ஞாயிறு காலை வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ஞாயிறு மதியம் ராஜிநாமா செய்தார் .

2014 - ஆம் ஆண்டு முதல் பாஜக மாநிலத் தலைவராக தமிழிசை செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்ததாக யார் தலைமைப் பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி பாஜக வட்டாரங்களில் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

லைட் ஹவுஸ்... ஷ்ருதி ஹாசன்!

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

SCROLL FOR NEXT