தமிழ்நாடு

தமிழிசைக்கு பிரதமர் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN


மதுரை: பாஜகவிற்கு உழைத்த தமிழிசை சௌந்திரராஜனுக்கு பிரதமா் நரேந்திர மோடி மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

மதுரை விமானநிலையத்தில் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவில் தமிழக தலைவராக பணியாற்றிய தமிழிசை சௌந்திரராஜன் தெலங்கான மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் சோ்ந்து கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பாஜகவிற்கு உழைத்த தமிழிசை சௌந்திரராஜனுக்கு பாரத பிரதமா் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜகவில் உழைக்கு அத்தனைபேருக்கும் சிறப்பான அந்தஸ்து கிடைக்கும். தமிழகத்தில் வரும் டிசம்பா் மாத இறுதியில் பாஜகவிற்கு புதிய தலைவா் நியமிக்கப்பட உள்ளார். 

யாரை தலைவராக்குவது என கட்சிதான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி கடந்த 1969 இல் வங்கிகள் தேசியமயமாக இணைப்பு செய்தபோது அனைவரும் வரவேற்றநிலையில், தற்போது 27 வங்கிகளை 12 வங்கிகளாக இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய அளவு பொருளாதார முன்னேற்றத்தையும், வங்கிகளின் செயல்பாடுகளில் மாற்றமும் ஏற்படும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT