தமிழ்நாடு

ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

DIN


ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்குரிய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன் லைனில் பதிவு செவ்வாய்க்கிழமை (செப். 3) முதல் தொடங்கப்பட உள்ளது.
என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., சி.எஃப்.டி. மற்றும் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பி.டெக்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு, அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ. பிரதானத் தேர்வு (அட்வான்ஸ்டு) ஆகியவை நடத்தப்படுகின்றன.
முதல் நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி.. சி.எஃப்.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அதேசமயம், முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்று, பிரதானத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
இதில் முதல்நிலைத் தேர்வானது என்.டி.ஏ. சார்பில் ஆண்டுக்கு இரண்டுமுறை நடத்தப்படுகிறது. அதாவது ஜனவரி, ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் நடத்தப்படும். ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் திருப்திகரமான மதிப்பெண் பெறாத மாணவர்கள், உடனடியாக ஏப்ரலில்  நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம். இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எதுவோ அதை  பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத் தேர்வு  ஏதாவது ஒரு ஐஐடி சார்பில் நடத்தப்படும். 
இப்போது ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. இதற்கு செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://nta.ac.in  என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT