தமிழ்நாடு

செப். 7-இல் வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் கடவுச்சீட்டு முகாம்

DIN


சென்னை கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மண்டல அலுவலகம் சார்பில் வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் சிறப்பு கடவுச்சீட்டு முகாம் சனிக்கிழமை (செப். 7) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வோர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏதுவாக வேலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரியில் உள்ள அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையங்களில் சனிக்கிழமை (செப். 7) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பங்குபெற விண்ணப்பிப்போர்  www.passportindia.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து ஏ.ஆர்.என். எண்ணைப் பெற்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி  சந்திப்புக்கான நேரத்தை பெற்றுக் கொள்ளலாம். 
இந்த முகாமில் பங்குபெறும் விண்ணப்பதாரர்கள் பார்வை நேரம் மற்றும் ஏ.ஆர்.என். விவரங்களை அச்சிட்ட வடிவத்திலும், தேவையான அசல் ஆவணங்களையும், சுயச்சான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வரவேண்டும். இந்த முகாம் மூலம் சுமார் 170 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT