சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ISO:14001:2015 (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
தமிழ்நாடுசேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ISO:14001:2015 (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் ISO:14001:2015 (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக, சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, ரயில்வே வாரியம் அந்தந்த மண்டல ரயில்வே துறைகளுக்கு 24 வழிகாட்டுதல்களை பின்பற்றிட அறிவுறுத்தியது. இந்த வகையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள் முதல்கட்டமாக 36 ரயில் நிலையங்களில் பின்பற்றப்பட்டன.முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டன. தற்போது இரண்டாம் கட்டமாக 720 ரயில் நிலையங்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து ஏ1 மற்றும் ஏ அந்தஸ்து பெற்ற ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த வகையில், சேலம் கோட்டத்துக்குள்பட்ட கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் தேசிய பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதல்களை பின்பற்றின. இந்த 24 வழிகாட்டுதல்கள் ISO:14001:2015 சுற்றுச் சூழல் மேலாண்மை தரம் பெறுவது முதல்படியாகும். அந்த வகையில், கோவை ரயில் நிலையம் ஏற்கெனவே ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தில் ஐஎஸ்ஓ 14001 தரச்சான்று பெற்றது. எனவே, இதர 5 ரயில் நிலையங்களுக்கும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, குவெஸ்ட் சான்றிதழ் தர நிறுவனம் மூலம் தணிக்கை மற்றும் தரச்சான்றிதழ் ஆய்வு செய்யப்பட்டது.
முதல்கட்ட ஆய்வின் முடிவில், சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கரூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு குவெஸ்ட் நிறுவனம் ISO:14001:2015 தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது. தெற்கு ரயில்வேக்குள்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில்வே வாரியத்தால் அடையாளம் காணப்பட்ட ஏ 1 மற்றும் ஏ அந்தஸ்து பெற்றுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் ISO:14001 தரச்சான்றிதழ் பெற்றிருப்பது வேறு எந்த கோட்ட அலுவலகமும் பெறாத சிறப்பம்சமாகும்.
அதேபோல, ஐஎஸ்ஓ தரச்சான்று பெற உழைத்த உதவி வணிக மேலாளர் மாயா பீதாம்பரம் (சேலம்), உதவி சுகாதார அலுவலர் குமார் (கரூர் மற்றும் மேட்டுப்பாளையம்), கோட்ட சுகாதார நல அலுவலர் கும்பாரே (திருப்பூர்), ரயில் பெட்டி பணிமனை அலுவலர் தினேஷ் (ஈரோடு) ஆகியோர் அந்தந்த ரயில் நிலையங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாகச் செயல்பட்டனர்.
மேலும், அனைத்து நிலையங்களின் நீர் பயன்பாடு குறித்து தணிக்கை செய்தல், மறுசுழற்சி, மழை நீர் சேகரிப்பு மூலம் நீர் பயன்பாட்டை குறைத்திடுதல், மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் எல்இடி மின்விளக்குகள் பொருத்துதல், பிஎல்டிசி மின்விசிறிகள், சூரிய ஒளிமின்சாரம் ஆகியவற்றை கடைபிடித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும், மக்காத கழிவுகளை முறையாக கையாளுதல், ரயில் நிலையங்களில் அனைத்து நடைமேடைகளிலும் மக்கும், மக்காத குப்பைக் கழிவுகளை சேகரிக்க பல வண்ணத் தொட்டிகளை வைத்தல், ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகும்.
ரயில் நிலைய வளாகத்தில் குப்பைகளை கொட்டும் பயணிகளுக்கு ரூ.500-ம், பிற இதர நிறுவனத்தினருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலித்தல், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க போதிய எண்ணிக்கையில் கழிப்பறை கட்டுதல் ஆகிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நிறைவேற்றிட சேலம் கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையடுத்து, தரச் சான்றிதழ் பெறநடவடிக்கை மேற்கொண்ட சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை ஆகியோர் முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.முகுந்தன் ஆகியோருக்கு ரயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.