முகப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 5 செப்டம்பர், 2019 at 1:56 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:30 PM

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமத்தின் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் ஜி பஜார் பகுதியில் 15 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.