சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு, குளங்களை காணவில்லை என வழக்கு
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கிணறு, குளங்களை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் கிணறு, குளங்களை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு, குளங்களை காணவில்லை எனவும் எனவே அவற்றை கண்டுபிடித்து தரக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் பொன் தங்கவேலு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இம்மனு சென்னை உயர்தீநிதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.