முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக அதிகரிப்பு 

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 6 செப்டம்பர், 2019 at 5:55 PM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:31 PM

சென்னை: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 65,000லிருந்து 72,000 கனஅடியாக அதிகரித்துக் காணபப்டுகிறது.

Advertisement

இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.59 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 89.67 டிஎம்சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.