சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலராமாணீ 
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலராமாணீ ராஜிநாமா? 

மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தன்னை நியமித்துள்ள கொலிஜியம் முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலராமாணீ ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தன்னை நியமித்துள்ள கொலிஜியம் முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலராமாணீ ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தஹிலராமாணீ. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்துள்ளது.இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.  

இந்த நிலையில் இந்த இடமாற்ற முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு அண்மையில் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலராமாணீ ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல்வெளியாகியுள்ளது. 

மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தன்னை நியமித்துள்ள கொலிஜியம் முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து, அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளார் என்று உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

SCROLL FOR NEXT