தமிழ்நாடு

5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்

DIN


சென்னை: 5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்று பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டில் இருந்து நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வந்திருக்கிறது.

மத்திய அரசு மக்களின் கருத்துக் கேட்புக்கு விட்டிருக்கும் வரைவு தேசியக் கல்விக் கொள்கை, 2019 இல் மிக அதிகமாக எதிர்க்கப்படும் அம்சங்களில் ஒன்று இது. வரைவுக் கல்விக் கொள்கையை மத்திய அரசு இறுதிப்படுத்தும் முன்பே, தமிழக அரசு முந்திக் கொண்டு இவ்வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

தேர்வுகள் அதிலும் பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்குப் பெரும் மன உளைச்சலை அளிக்கும், பேயாக அவர்களை அச்சுறுத்தும் கொடுமை; குழந்தைகள் மேல் ஏவப்படும் வன்முறை; மன்னிக்கவியலா குற்றம்.

பிஞ்சுக் குழந்தைகளை பலியிடும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் - தமிழ்நாடு / புதுச்சேரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT