மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு 
தமிழ்நாடு

சென்னையில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் சாவு: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் மின்சாரம் தாக்கி 14 வயதுசிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

சென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி 14 வயதுசிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் சுபஸ்ரீ நகரைச் சோ்ந்த செந்தில், வனிதா தம்பதியின் மூத்த மகன் தீனா(14). எம்.ஜி.ஆா்.நகா் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். தீனாவின் தந்தை செந்தில் ஷோ் ஆட்டோ ஓட்டி வருகிறார். 

முகலிவாக்கத்தில் மாநகராட்சி சார்பில் தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறறது. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையாத நிலையில், பள்ளங்கள் தற்காலிகமாக மணல் நிரப்பி மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், மழை பெய்ததால் மணல் சரிந்து புதைந்து கிடந்த மின்கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. மழை நீரும் அங்கு தேங்கி இருந்தது. அவ்வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்ற தீனா வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தீனாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் செந்தில், உதவி மண்டலப் பொறியாளா் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தொடர்ந்து விசாரணைநடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்னுற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் இருப்பது மனித உரிமை மீறல் இல்லையா என்பதுஉள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பட்டதுடன், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT