தமிழ்நாடு

திருவள்ளுவர் பல்கலை.யில் தேர்வுக் கட்டணம் பன்மடங்கு உயர்வு: கட்டணத்தை குறைக்க பேராசிரியர்கள் வலியுறுத்தல்

DIN


கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டிருப்பதை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைக்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருப்பது, மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்டண உயர்வு: இளநிலை பட்ட மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு தாள் ஒன்றுக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ. 68-இலிருந்து ரூ. 100 ஆகவும், 3 மணி நேர செய்முறைத் தேர்வுக்கு  ரூ. 90-இலிருந்து ரூ. 175-ஆகவும்,  6 மணி நேர செய்முறைத் தேர்வுக்கு ரூ. 150-இலிருந்து ரூ. 350-ஆகவும், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ. 38-இலிருந்து ரூ. 75-ஆகவும், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணம் ரூ, 375-இலிருந்து ரூ. 750-ஆகவும், தற்காலிக பட்டச் சான்றிதழ் (புரொவிஷனல்) கட்டணம் ரூ. 150-இலிருந்து ரூ. 500-ஆகவும், பட்டச் சான்றிதழ் கட்டணம் ரூ. 225-இலிருந்து ரூ. 600-ஆகவும், பதிவுக் கட்டணம் ரூ, 38-இலிருந்து ரூ. 75-ஆகவும், தாமதத்துக்கான அபராதக் கட்டணம் ரூ. 150-இலிருந்து ரூ, 300-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
இதுபோல, முதுநிலை பட்ட மாணவர்களுக்கான கட்டணங்களும் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன.
கட்டண உயர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், கட்டண உயர்வைத் திரும்பப் பெற வாய்ப்பே இல்லை என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றத் தலைவர் ம.சிவராமன் கூறியது:பல்கலைக்கழகம் தேர்வு கட்டணங்களை  பன்மடங்கு திடீரென உயர்த்தியிருப்பது ஏழை மாணவர்களை கடுமையாகப் பாதித்துள்ளது. மாணவர்களின்  நலனைக் கருத்தில் கொண்டு, கட்டண உயர்வைப் படிப்படியாக மேற்கொள்வதுதான் சரியானதாக இருக்கும். எனவே, கட்டண உயர்வை பல்கலைக்கழகம் சற்று குறைக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT