தமிழ்நாடு

மரங்களைப் பாதுகாக்க ஆணையம் அமைக்க வேண்டும்

DIN


மரங்களைப் பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மதுரையில் நெடுஞ்சாலை பாலம் அமைப்பதற்காக 80-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட நிலையில், மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு மரங்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. 
வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் மரங்களை வெட்டி வீழ்த்துவதைவிட, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நடலாம் என்று அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், மரங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டாலாவது அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் வழி பிறக்காதா என்ற வினாவை ஏக்கத்துடன் எழுப்பியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த அக்கறை நேர்மையானது. எதிர்பார்ப்பு நியாயமானது. மரங்கள் ஆணையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை  தமிழக சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும். 
இந்த ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும், எந்தப் பணிக்காகவும் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றால், அதற்கான அனுமதிகோரி சம்பந்தப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரங்கள் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். 
அந்தக் கோரிக்கையை ஆய்வு செய்யும்  ஆணையம், கள ஆய்வு மேற்கொண்டு தவிர்க்க முடியாத தேவை இருந்தால் மட்டுமே மரங்களை வெட்ட அனுமதி அளிக்கும். 
அவ்வாறு அனுமதி அளிக்கும் பட்சத்தில் வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக எவ்வளவு மரக்கன்றுகள் எந்தெந்தப் பகுதிகளில் நடப்பட வேண்டும் என்பது குறித்தும் மரங்கள் ஆணையம் ஆணை பிறப்பிக்கும். 
 மொத்தத்தில் தமிழகத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விஷயத்தில் மரங்கள் ஆணையம் மிகப்பெரிய கவசமாகத் திகழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT