பத்திரப் பதிவுத் துறை தலைவராக ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கிய துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.
அதன் விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
மகேசன் காசிராஜன் - தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் (தமிழ்நாடு கனிமவளத் துறை நிர்வாக இயக்குநர்).
முகமது நசிமுதின் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் (எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர்).
ராஜேந்திர குமார் - சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை முதன்மைச் செயலாளர் (தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநர்).
ஜோதி நிர்மலா - பத்திரப் பதிவுத் துறை தலைவர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர்).
பி.சந்திரமோகன் - எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (தமிழ்நாடு கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்).
எம்.வள்ளலார் - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர் (சிறுபான்மையினர் நலத் துறை ஆணையாளர்).
எம்.ஆசியா மரியம் - தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை நிர்வாக இயக்குநர் (நாமக்கல் மாவட்ட ஆட்சியர்).
கே.எஸ்.பழனிசாமி - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் (திருப்பூர் மாவட்ட ஆட்சியர்).
கே.பாஸ்கரன் - நகராட்சி நிர்வாக ஆணையர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர்).
டி.மோகன் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையாளர் (பொதுத்துறை துணைச் செயலாளர்).
கே.செந்தில் ராஜ் - தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் (தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் உறுப்பினர் செயலாளர்).
எஸ்.நாகராஜன் - தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் (தொழில் முனைவோர் மற்றும் புதுமை முயற்சிகள்
நிறுவனத்தின் இயக்குநர்).
ஆனி மேரி ஸ்வர்னா - தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நியமன வாரியத்தின் தலைவர் (பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர்).
ஜி.கோவிந்தராஜ் - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்).
எஸ்.நடராஜன் (சீனியர்) - வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலாளர் (தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர்).
பி.மகேஸ்வரி - நில நிர்வாக கூடுதல் ஆணையாளர் (மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர்).
கிராந்தி குமார் பதி - வணிகவரிகள் துறை இணை ஆணையாளர்-ஈரோடு (நாமக்கல் மாவட்ட சார் ஆட்சியர்).
ஏ.கே.கமல் கிஷோர் - திருவாரூர் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அலுவலர் (நாகப்பட்டினம் சார் ஆட்சியர்).
ஜானி டாம் வர்கீஸ் - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநர் (மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர்).
ஏ.ஆர்.ராகுல் நாத் - பொதுத் துறை துணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட திட்ட முகமை அலுவலர்).
வி.ஜெயசந்திர பானு ரெட்டி - பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையர் (வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணைச் செயலாளர்).
காக்கர்லா உஷா - தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.