தமிழ்நாடு

நான்குனேரியில் போட்டியிட குமரி அனந்தன் விருப்ப மனு

நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

DIN

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் பேரவைத் தொகுதிகளுக்கு அக்.21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசினர். 

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவும், நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸூம் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தகப்பனாருமான குமரி அனந்தன் விருப்ப மனு பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் சுதந்திர நாள்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் மூவர் பலி; 64 பேர் காயம்!

சங்கத்தமிழர் வாழ்வியலில் - சந்தனம்!

தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

இப்படி பண்ணிட்டீங்களே தலைவா! கூலி எப்படி இருக்கு?

SCROLL FOR NEXT