FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டெங்கு நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கைகள்: அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 

டெங்கு நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான போர்க்கால நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

31 ஜனவரி 2024, 3:41 pm IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

சென்னை: டெங்கு நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான போர்க்கால நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது ரோகித்,  முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்த வருடம் அ.தி.மு.க. அரசும், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்களும் - டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்கத் தவறிய மோசமான போக்கின் விளைவாக, இரு குழந்தைகளின் உயிர்கள் சென்னையில் மட்டும் பறிபோயிருக்கிறது. இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலால் உயிர்ப்பலியும், பாதிப்பும் தொடருகிறது.

கொடிய டெங்கு நோயிலிருந்து குழந்தைகளையும், மக்களையும் காப்பாற்றத் தேவையான போர்க்கால நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்திட வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. அரசு  நடவடிக்கை எடுக்கும் என்று காத்திராமல், அ.தி.மு.க. அரசின் மெத்தனமான போக்கை நன்றாக அறிந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக மருத்துவ அணியினரும் - ஆங்காங்கே டெங்கு காய்ச்சல், அதன் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments