புதுவை முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி 
தமிழ்நாடு

அதிமுகவில் கூட்டணி உடன்பாடு: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி 

வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாக,   புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாக,   புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதேபோல் இந்த இடைத்தேர்தலில் இருகட்சிகளின் கூட்டணி தொடர்ந்தது. அதன்படி புதுச்சேரியில் உள்ள தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகத்தில் நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.  

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் வியாழன் மாலை கையெழுத்தானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT