ஒரே நாளில் 14 பாலங்களை திறந்துவைத்து அசத்தினார் முதல்வர் பழனிசாமி!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட 14 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட 14 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (26.9.2019) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 35 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் 7 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் தருமபுரி உட்பட 14 இடங்களில் 35 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மேலும், ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி – பண்ணாரி சாலையில், பவானிசாகரில் பவானியாற்றின் குறுக்கே 7 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், சென்னை எல்லைச் சாலை திட்டத்திற்கான நிலயெடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஜீப்புகளை வழங்கிடும் விதமாக, எடப்பாடி கே. பழனிசாமி இன்று அவ்வாகனங்களின் சாவிகளை அவ்வலுவலர்களுக்கு வழங்கினார்கள்.