தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பகவத் கீதை: இந்திய கல்விக் குழு தலைவர் விளக்கம்

DIN


அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் உபநிடதங்கள் சேர்க்கப்பட்டிருப்பதற்கு அகில இந்திய கல்விக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழக பாடதிட்டத்தில் பகவத் கீதை சம்பந்தப்பட்ட பாடம் மட்டும் இடம்பெற்றதற்கு, குர் ஆன், பைபிள் போன்றவற்றை நடத்தக்கூடிய பேராசிரியர்கள் இல்லாததே காரணமாக இருந்திருக்கலாம் என அகில இந்திய கல்விக் குழுவின் தலைவர் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்கிற அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவுறுத்தலின்படி, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. 

மேலும், முதுநிலை பொறியியல் பாடத் திட்டத்தில் வரலாறு, அரசியலமைப்புச் சட்டம், சுற்றுச்சூழல், தத்துவ நெறி, வாழ்க்கை நெறிமுறைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முதுநிலை பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் பகவத்கீதையிலிருந்து சில பகுதிகளும், உபநிடதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்திய மேல்நாட்டு தத்துவப் படிப்பு என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தத்துவப் படிப்பு என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சிக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை ஐஐடியில் நடைபெற்ற ஹேக்கதான் 2019 என்ற நிகழ்ச்சியில் அகில இந்திய கல்விக் குழுவின் தலைவர் சஹஸ்ரபுத்தே கலந்து கொண்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.டெக் இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் பகவத் கீதை சம்பந்தமான பாடங்கள் சேர்க்கப்பட்டது குறித்து விளக்கமளித்த அவர், பொறியியல் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பாடங்களை மட்டும் படித்தால் போதாது. அதனையும் தாண்டி தத்துவவியல், மனோதத்துவம், பொருளாதாரம், சமூகவியல், அரசியலமைப்பு, மேலாண்மை ஆகியவற்றை பற்றிய அடிப்படை புரிதலோடாவது இருக்க வேண்டும். 

இந்த அடிப்படையில்தான் பி.டெக் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அவை விருப்பப் பாடங்களேயன்றி கட்டாயப் பாடங்கள் அல்ல என அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT